இலங்கையில் தபால் சேவையின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய மிதிவண்டிகள் இல்லாமல், முச்சக்கர வண்டிகள் மூலம் தபால்காரர்கள், கடிதங்களை வழங்குவார்கள் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தபால் சேவையின் நவீனமயமாக்கலின் போது, நீண்டகாலமாக களத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பாரம்பரிய மிதிவண்டிகளுக்கு பதிலாக 1000 முச்சக்கர வண்டிகள் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும்.
நாங்கள் உத்தியோகபூர்வ சீருடையையும் வழங்குவோம் என்று நம்புகிறோம். இதன் மூலம் நாட்டில் வலுவான தபால் சேவையை உருவாக்குவதே எமது இறுதி இலக்காகும்’ என தெரிவித்தார்.