வெளிநாட்டு கட்டுமாணத் தொழிலாளர்களை ஈர்ப்பதற்காகப் பிரித்தானியா விசா விதிகளை தளர்த்தியுள்ளது.
கட்டுமாணப் பணிகளுக்கான வேலையாட்கள் பற்றாக்குறை நிலவுவதால், வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை எளிதாகக் கொண்டு வருவதற்காக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மேசன், தச்சன், கூரை வேலை செய்தல்,வர்ணப் பூச்சு போன்ற தொழிற் துறையினைச் சார்ந்தோருக்கு சில மாற்றங்களின் கீழான விசாக்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியா சில துறைகளில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, முதலாளிகள் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இதனையடுத்து, நேற்று பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில், புதிய வேலைவாய்ப்புக்களுக்கு ஆட்களைச் சேர்ப்பது முக்கியமான தேசிய உள்கட்டமைப்பை வழங்குவதற்கும், தொடர்புடைய தொழில்களின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த தொழிலுக்காக விண்ணப்பிப்பவர்கள் வேலையின் வழக்கமான கட்டணத்தில் 80 சதவீதம் செலுத்தலாம் எனவும், மேலும் விசாவிற்கு தகுதி பெறலாம் என்று பிரித்தானிய அரசாங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்களுக்கு வேலை வழங்குநரிடமிருந்து வேலை வாய்ப்பும் ஆங்கில மொழித் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.