உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் 90 வீதம் நிறைவு பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப் பரீட்சையின் ஆங்கில மொழி மூலம் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி நிறைவு பெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான பொறியியல் தொழில்நுட்ப செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவு பெறள்ளதாகவும் 13,000 பரீட்சாத்திகளுக்காக 48 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொது தராதர உயர் தரத்துடன் சம்பந்தமான உயிர் பல்வகைமை தொழில்நுட்ப பாடத்திற்கான செயன்முறை பரீட்சை எதிர் வரும் ஐந்தாம் திகதி ஆரம்பமாகி ஏழாம் திகதி வரை 77 மத்திய நிலையங்களில் நடைபெறும் என்றும் அதற்காக 15,000 பேர் பரீட்சைக்குத் தோற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply