4-வது ஆஷஸ் – முதல் இன்னிங்சில் 592 ஓட்டங்கள் குவித்தது இங்கிலாந்து!

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இடம்பெற்று வருகின்றது.

நூணய சுழற்சியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

மார்னஸ் லபுசேன், மிட்ச்ல் மார்ஷ் தலா 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். டிராவிஸ் ஹெட் 48 ஓட்டங்கள், ஸ்டீவன் ஸ்மித் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் ஓரளவு போராடி 36 ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 இலக்குகளும், பிராட் 2 இலக்குகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராளே அதிரடியாக துடுப்பாடி சதமடித்தார்.

அவர் 189 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 84 ஓட்டங்கள், ஹாரி புரூக் 61 ஓட்டங்கள், மொயீன் அலி 54 ஓட்டங்கள், பென் ஸ்டோக்ஸ் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் நிலைத்து நின்று துடுப்பாடி பேர்ஸ்டோவ் 99 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ஓட்டங்கள் குவித்தது. இதன்மூலம் 275 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கிரீன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply