பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குட்பட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களை தாக்கிய குற்றச்சாட்டில், திருமணமான தம்பதிகள் என அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கஹதுடுவ பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலில், கெஸ்பேவயில் இருந்து மொரட்டுவை நோக்கிச் சென்ற லொறியை அஜாக்கிரதையாக ஓட்டியமைக்காக இரண்டு கான்ஸ்டபிள்களும் லொறியை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தனர்.
எவ்வாறாயினும், சாரதி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கட்டளையை மீறி லொறியைச் செலுத்த முயற்சித்துள்ளார், பின்னர் ஹெராலியாவல நோக்கிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்கு முன்னால் நின்ற லொறியிலிருந்து ஒரு பெண் உட்பட கிட்டத்தட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் வந்து லொறியை நிறுத்துமாறு சைகை காட்டி துரத்திச் சென்ற இரண்டு கான்ஸ்டபிள்களையும் தாக்கினர்.
பின்னர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பிலியந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து சம்பவம் தொடர்பில் அவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கெஸ்பேவ மற்றும் கஹதுடுவ பொலிஸ் நிலையங்களில் இருந்து ஹெரலியவல பிரதேசத்திற்கு பொலிஸ் குழுக்கள் குவிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, காயமடைந்த பொலிஸார் தற்போது களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட தம்பதியினரின் இரண்டு மகன்கள் உட்பட தாக்குதலில் தொடர்புடைய ஏனைய நபர்களை கைது செய்தமை தொடர்பிலான விசாரணைகள் தற்போது விசேட பொலிஸ் குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.