இங்கிலாந்து தீம் பார்க்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இங்கிலாந்தில் எஸ்செக்ஸ் கவுண்டி கவுன்சிலில் சவுத் எண்ட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பிரம்மாண்ட ரோலர்கோஸ்டர் ஒன்று பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த ரோலர்கோஸ்டரில் 8 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 8 வயது குழந்தையும் அடங்கும். இந்த ரோலர்கோஸ்டர் கார், மேலே ஏறி சென்ற போது திடீரென மாட்டிக் கொண்டது. கிட்டதட்ட தலைகீழாக தொங்கியது போன்ற நிலைக்கு வந்துவிட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 40 நிமிடங்கள் ரோலர்கோஸ்டர் நகரவில்லை. உடனே மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரோலர்கோஸ்டரை நகர்த்துவதற்கு போராடினர். இருந்தும் ரோலர்கோஸ்டரை நகர்த்த முடியவில்லை.

பல போராட்டத்தின் பின்னர் மாட்டிக் கொண்ட 8 பேரை பத்திரமாக மீட்டனர். அடுத்த சில நிமிடங்களில் ரோலர்கோஸ்டரில் இருந்த தொழில்நுட்ப பிரச்சினையையும் தீர்த்துவிட்டனர்.

இதுதொடர்பாக பேசிய பொழுதுபோக்கு பூங்காவின் தாய் நிறுவனமான ஸ்டாக்வேல்யூ குழுமத்தின் மேலாண் இயக்குநர் மார்க் மில்லர்,

“எங்களின் திறன் வாய்ந்த குழுவினர் மீட்பு பணிகளை வேகமாக மேற்கொண்டனர். இவர்கள் தேசிய அளவில் சிறப்பான பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுள்ளனர்.

சரியாக 40 நிமிடத்தில் பொதுமக்கள் மீட்கப்பட்டனர். அனைவரும் அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர். பின்னர் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இனிமேல் பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply