சுப்பர் ஓவரில் காலி டைட்டன்ஸ் அணி வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் காலி டைட்டன்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்யில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய காலி டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக பானுக ராஜபக்ச 48 ஓட்டங்களையும், தசுன் ஷானக்க 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் தம்புள்ளை அணியின் ஷாநவாஸ் தஹானி 37 ஓட்டங்களுக்கு 02 இலக்குகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, 181 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய தம்புள்ளை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 இலக்குகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் காலி அணியின் தசுன் ஷானக்க 27 ஓட்டங்களுக்கு 03 இலக்குகளை கைப்பற்றினார்.

இதற்கமைய, இந்த போட்டிய சமநிலையில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து, போட்டி சுப்பர் ஓவராக நடத்தப்பட்டது.

சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணி ஒரு ஓவரில் 09 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

10 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய காலி டைட்டன்ஸ் அணி சுப்பர் ஓவரில் 10 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

இதேவேளை, 2023 ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியின் விபரங்களுக்கு :- வெற்றியுடன் ஆரம்பித்த ஜெவ்னா கிங்ஸ்; 4ஆவது எல்.பி.எல் தொடரின் முதலாவது ஆட்டநாயகன் வியாஸ்காந்த்!

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply