மின்தூக்கிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண்

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பணி நிமித்தமாக வெளிய சென்றபோது எதிர்பாராத சம்பவ ஒன்று அரங்கேறி, அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தபால்காரரான ஓல்கா லியோன்டிவா, கடந்த ஜூலை 24ம் திகதி வழக்கம்போல தனது பணிக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு கட்டிடத்தின் மின்தூக்கியில் அவர் எறியுள்ளார், 9 மாடி கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்திற்கு அவர் சென்றபோது மின்தூக்கி பழுதாகியுள்ளது.

மின்தூக்கியை திறக்கமுடியாமல் உள்ளேயே முடங்கிய அந்த பெண், சுமார் மூன்று நாட்கள் அந்த மின்தூக்கிக்குள் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 24-ம் திகதி வேலை முடிந்து அவர் வீடு திரும்பாததால் அவரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் சுமார் மூன்று நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு 32 வயதான அந்த பெண்ணின் உடல் இறுதியாக மின்தூக்கிக்குள்ளிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர், சீனாவில் தயாரிக்கப்பட்ட அந்த மின்தூக்கி முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றாலும், அது வேலை செய்யும் (Working Condition) நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்த அன்று மின்வெட்டு ஏதும் ஏற்படவில்லை என்பதை அந்த பகுதி மின்சார விநியோக நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதேபோன்ற சம்பவம் கடந்த வாரம் இத்தாலியின் பலேர்மோவில் நடந்தது குறிப்பிடத்தக்கது, அங்கு பிரான்செஸ்கா மார்ச்சியோன் என்ற 61 வயது பெண்மணி, மின்வெட்டின் போது மின்தூக்கியில் சிக்கி இறந்து கிடந்தார்.

கடந்த ஜூலை 26ம் தேதி மின்தடை ஏற்பட்டு அவர் மின்தூக்கிக்குள் சிக்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் உடனடியாக அழைக்கப்பட்டன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் வருவதற்குள் அந்த பெண்மணி இறந்துவிட்டார்.

இந்நிலையில் இந்த இரு விபத்துகளுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரமான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் முழு முயற்சியையும் எடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply