அமெரிக்காவில் சைபர் தாக்குதல்!

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலை இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளன.

இதனால் வைத்தியசாலைகளில் உள்ள கணினி அமைப்புகள் முடங்கியது. இதையடுத்து மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைகள், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பிற சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

சில அவசர அறைகள் மூடப்பட்டன. சைபர் தாக்குதல் மூலம் வைத்தியசாலைகளின் தகவல்களை திருட வாய்ப்பு இருந்ததால் அதை தடுக்க, சேவர்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சைபர் தாக்குதலில் இருந்த கணினி அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply