சீனத் தலைநகர் பீஜிங்கிலிருந்து தெற்கே 300 கிலோமீற்றர் (185 மைல்) தொலைவில் உள்ள டெசோ நகருக்கு அருகே இன்று அதிகாலை 2:33 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 126 வீடுகள் இடிந்து விழுந்து 21 பேர் காயமடைந்தனர் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சாத்தியமான சேதம் குறித்து ரயில் பாதைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ சீன செய்தி சேவை தெரிவித்துள்ளது.