சிலி நாட்டு கடற்கரையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்!

கடல்வாழ் உயிரினங்களில் மிக பெரியதாக நீல திமிங்கலம் இருந்து வருகிறது.

ஆழமான கடற்பகுதியில் இது வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சிலி நாட்டின் அன்குட் தீவு பகுதியில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் நீல திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது.

இதை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த திமிங்கலம் எப்படி கரைக்கு வந்தது என்பது தெரியவில்லை. அந்த கடற்கரை பகுதியில் கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது.

இதனால் கப்பலில் மோதி அது கரைக்கு வந்ததா? அல்லது பருவநிலை மாற்றம் காரணமாக ஒதுங்கியதா? என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply