நாகசாகி அணுகுண்டு தாக்குதலின் 78 ஆவது நினைவு தினம் இன்று

நாகசாகி மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 78 ஆண்டுகள் கடந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த தாக்குதலில் இறந்தவர்களுக்கான நினைவு தினம் ஜப்பானில் அனுசரிக்கப்பட்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டு தாக்குதலை நடத்திய அமெரிக்கா, 3 நாட்கள் கழித்து அதாவது ஆகஸ்ட் 9 ஆம் திகதி நாகசாகி நகரத்தின் மீதும் அணுகுண்டு தாக்குதல் மேற்கொண்டது.

இந்த 2 தாக்குதல்களிலும் 2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

உலகை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாகசாகியில் அமைதி மணி ஒலிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காணொளி வாயிலாக உரையாற்றிய ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க ஜப்பான் தொடர்ந்து போராடும் என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply