மூன்றரை ஆண்டுகளாக எந்த ஆட்சேர்ப்பும் செய்யப்படாத நிலையில், சிவில் பாதுகாப்புப் படை தற்போது ஒரு ஆள்பற்றாகுறையான படையாக நியமிக்கப்பட்டுள்ளது என கோபா குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக சமீபத்தில் நடைபெற்ற கோபா குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
சிவில் பாதுகாப்புப் படையில் தற்போது 33 ஆயிரத்து 687 பேர் இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தொடர்பான சட்டக் கட்டமைப்பை அரச வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்றவாறு தயாரிப்பது தொடர்பான அறிக்கையை செப்டம்பர் 11 ஆம் திகதிக்கு முன்னர் கோபாவிற்கு சமர்ப்பிக்குமாறு கோபாவின் தலைவர் லசந்த அழகியவண்ண பரிந்துரைத்துள்ளார்.