நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் நிறுத்தம்!

அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த விடயத்தினை சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த 11 திட்டங்களுக்காக கிட்டத்தட்ட 2531 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் திட்டங்கள் முடக்கப்பட்டதன் காரணமாக இந்நாட்டு மக்கள் கிடைக்க வேண்டிய நன்மைகளை இழந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply