இலங்கையின் தேசிய அபிலாசைகள் மற்றும் சர்வதேசப் பிரதிபலிப்பை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த மூலோபாய தொடர்பாடல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றயதினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரால் குறித்த வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் சரியான வெளிநாட்டுக் கொள்கையை உணர்வுபூர்வமாக நிர்வகிக்கவும், உலகளாவிய மற்றும் பிராந்திய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையின் சர்வதேச பிம்பத்தை உயர்த்தவும் மூலோபாய தகவல்தொடர்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அதன் அவசியத்தையும் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சும் வெகுஜன ஊடக அமைச்சும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.