கொலம்பியாவில் நில நடுக்கம் – வீதியில் தஞ்சமடைந்த மக்கள்!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் கொலம்பியாவின் தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கி.மீட்டர் தொலைவினை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.

6.3 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்கு காணப்படுகின்ற கட்டிடங்கள் அதிர்வுக்குள்ளாக்கின எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சிறிது நேரத்தில் 5.7 ரிக்டர் அளவு நில அதிர்வும் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

உயரமான கட்டிடங்களில் வசித்த மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவில் உள்ள மெட்ல்லின் மற்றும் காலி உள்ளிட்ட நகரங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

குறித்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புக்கள், சேதங்கள் எதுவும் இதுவரை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply