மெனிங்கோகோகல் மூளைக்காய்ச்சல் பாக்டீரியா நோய் நிலை குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என தொற்றுநோயியல் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் வருடாந்தம் இதே நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பதிவாகி வருவதாக தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே குறிப்பிட்டுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் இறந்துள்ளதாகவும் மேலும் ஒரு டசனுக்கும் அதிகமானவர்கள் குறித்த நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு காரணம் மெனிங்கோகோகஸால் ஏற்படும் மூளைக்காய்ச்சலினால் ஆகும், இது கண்டறியப்படாத நிலை அல்ல. இந்த நோய் பாதிக்கப்பட்ட நபர்களின் நெருங்கிய தொடர்பு மூலம் மாத்திரமே பரவுகிறது என மருத்துவர் மேலும் கூறியுள்ளார்.
எனவே, சிறைச்சாலையில் பரவும் நோய் சமூகத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் வைத்தியர் கினிகே மேலும் தெரிவித்துள்ளார்.