உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டைக்கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது.
2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு, அல் கொய்தா பயங்கரவாதிகள் 110 அடுக்குமாடிகள் கொண்ட உலக வர்த்தக மையத்தின் மீதும், அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீதும் விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இது உலகவரலாற்றில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாக கருதப்படுகிறது. மேலும் அந்த தாக்குதல்களில் 25,000 பேர் படுகாயம் அடைந்ததாகவும் 3,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாகவும் கூறப்படுகின்றது.