விவசாயிகளுக்கான மகிழ்ச்சி செய்தி!

வரவிருக்கும் பயிர்ச்செய்கை பருவத்திற்கு உரங்களை கொள்வனவு செய்ய விவசாயிகளுக்கு 12,000 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அமைச்சகம், கரிம அல்லது இரசாயன உரம் வாங்குவதற்கு ஹெக்டேருக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றய தினம்  மாவட்டங்களிலுள்ள தேசிய விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும்  விவசாய சமூகத்தினருடனும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து  கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி, பாண்டி உரம் எனப்படும் யூரியா மற்றும் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் ஆகிய இரண்டு உரங்களும்  போதுமான அளவு அரசிடம் இருப்பதாகவும், அதே நேரத்தில் தனியார் துறையானது டிரிபிள் சூப்பர் பொஸ்பேட்  உரத்தை வழங்க உள்ளதாகவும் அமைச்சர் மேலும் உறுதியளித்தார்.

இதேவேளை, தமக்கு உர மானியம் தேவையில்லை எனவும், நெல் விற்பனைக்கு அதிக விலை வழங்குமாறும் விவசாய சமூகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply