கண்டுபிடிக்கப்பட்டது உலகின் எட்டாவது கண்டம்!

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஸீலந்தியா (Zealandia)எனப்பெயரிடப்பட்டுள்ள குறித்த கண்டமானது 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும், இது நியூசிலாந்துக்கு அருகே பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

அத்துடன்  கடல் தளத்தில் இருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களைப்  பயன்படுத்தியே ஆராய்ச்சியாளர்கள் இக்கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட இப்புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதிகள்  நீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும், இது மடகஸ்கார் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது எனவும், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply