இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலங்கை 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது இந்த வருடத்தில் ஒரு மாதத்தில் ஈட்டிய அதிகூடிய ஏற்றுமதி வருவாயாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஓகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1,119 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஈட்டிய ஏற்றுமதி வருவாயுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை ஓகஸ்ட் 2022 இல் ஈட்டிய ஏற்றுமதி வருவாயை விட 8.7% குறைவாகும்.
இதற்கிடையில், ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் 2023 வரை ஈட்டிய மொத்த ஏற்றுமதி வருவாய் 8,010 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது, இது 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானத்தை விட 10.1% குறைவாகும்.
வெளிநாட்டு சந்தையில் உள்ளூர் தயாரிப்புகளுக்கான தேவை குறைந்ததன் காரணமாக ஏற்றுமதி வருமானம் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.