இலங்கையில் தற்போது பக்கவாதத்திற்கு உள்ளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.
ஒருவர் உரையாடும் போது வார்த்தை பிரயோகங்களில் ஏற்படும் தடுமாற்றம் மற்றும் முகத்தின் ஒரு பக்கம் இழுப்பது போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அது பக்கவாதத்துக்கான அறிகுறிகள் ஆகும்.
உலகளாவிய ரீதியில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பக்கவாதம் காரணமாக உயிரிழப்பதாகவும் அவர்களில் 51 சதவீதமானோர் ஆண்களாவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இரண்டு இலட்சம் பேர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.