போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முதல் குற்றவாளியான பதிவாளர் அக்டோபர் 13 அன்று கைது செய்யப்பட்டதுடன் இரண்டாவது குற்றவாளி நான்கு நாட்களுக்குப் பிறகு சந்தேக நபர் ஒருவரின் வெளிநாட்டு பயணத் தடையை நீதிமன்றத்தால் நீக்கியதாக போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, சந்தேக நபரை வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்குமாறு போலி ஆவணங்கள் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதிவாளருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதுடன் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் அழைப்பாணையை நிறைவேற்றுபவர் என அடையாளம் காணப்பட்டார்.
இதேவேளை, இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளும் தற்போது விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.