முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ரணவக்கவினால் இந்த வழக்கை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வரும் வரை இடைக்காலத் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சமத் மொராயிஸ் ஆகியோரால் முன்னாள் அமைச்சரின் மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்கி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் முன்னாள் அமைச்சர் பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் விபத்து சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. .