பல மாநில மற்றும் பொது சேவை தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பிரச்சாரம் இன்று , பல அரசு நிறுவனங்களுக்கு முன்பாக நடைபெற்று வருகின்றது.
இதன்படி, பல கோரிக்கைகளை முன்வைத்து, பல அரச மற்றும் அரச சேவை தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய ரீதியில் தமது மதிய உணவு நேரத்தின் போது எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதை அடுத்து குறித்த எதிர்ப்புப் பிரச்சாரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி இன்று நண்பகல் 12.00 மணிக்கு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.
ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரும் படி உயர்த்தப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் 2016 மற்றும் அதற்குப் பிறகு அரச துறையில் இணைந்தவர்களுக்கு ஓய்வூதிய உரிமையை மீட்டெடுப்பதற்காகவும் இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்கம் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் சூரியாராச்சி மேலும் எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடு நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இவ்வேளையில் அரசியல் உள்நோக்கங்களினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான போராட்டங்களை அனுமதிக்க முடியாது எனவும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதிக்கான தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.