பேரா ஏரி அபிவிருத்தித் திட்டம் பற்றிய அறிக்கைகளை கோரும் சகல ரத்நாயக்க!

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க, பேரா ஏரி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த அறிக்கைகளை டிசம்பர் 15 ஆம் திகதிக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டம் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை உடனடியாக ஜனாதிபதியிடம் சமர்பிக்குமாறும் ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் அமுலாக்கம் மற்றும் பேரா ஏரி அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பிலான ஜனாதிபதி செயலகத்தில்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பேரா ஏரியைச் சுற்றி அடையாளம் காணப்பட்ட காணிகளை தனியார் துறையினருடன் இணைந்து பொது நடவடிக்கைகளுக்காக அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. பேரா ஏரியில் கழிவுநீர் குழாய்கள் திருப்பி விடப்படுவதை தடுக்கும் முயற்சிகள் குறித்தும், ஏரியில் பக்டீரியா மற்றும் பாசிகளின் சதவீதத்தை குறைக்கும் நோக்கிலும் குறித்த விவாதம் நடத்தப்பட்டது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் மூன்று இடங்களில் மத்திய பேருந்து நிலையத்தை மீள அபிவிருத்தி செய்தல், தற்போதைய பேருந்து நிலையத்தின் வர்த்தக அபிவிருத்திக்காக தனியார் துறையினருடன் இணைந்து கொழும்பு நகரில் பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுதல் மற்றும் மீள் நடுதல் போன்ற பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் பாழடைந்த கட்டிடங்களை கண்டறிந்து பராமரித்தல், போக்குவரத்து ஒழுங்குமுறை திட்டத்தை உருவாக்குதல், மற்றும் மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் கொழும்பில் நெரிசலைக் குறைப்பதற்கும் முகாமைத்துவம் செய்வதற்கும் இலங்கை பொலிஸ், கொழும்பு மாநகர சபை மற்றும் வர்த்தக சங்கங்களுடன் இணைந்த வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்த விரிவான கலந்துரையாடலில் கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply