தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவும் எனவும் அறிவித்துள்ளது.
தென், ஊவா, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.
காற்று வடகிழக்கு திசையில் வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ. கொழும்பிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலும் கடற்பரப்புக்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
கொழும்பில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலும் கடற்பரப்புக்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சிறிதளவு முதல் மிதமானது வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.