இரு ஆசிய நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை மற்றும் கம்போடியாவிற்கு எதிர்வரும் ஜனவரி 9 முதல் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, ஜப்பானிய நிதி அமைச்சர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, நாட்டிற்கான கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இலங்கை, ஜப்பான் மற்றும் பிறர் தலைமையிலான கடனாளிகள் குழு கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பது மற்றும் வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான அடிப்படை உடன்பாடு கடந்த நவம்பர் மாதம் எட்டப்பட்டது.
கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு நிலையான முன்னேற்றம் மிகவும் முக்கியமானது என்று ஜப்பானிய நிதி அமைச்சர் சுசுகி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.