இன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

வரும் சிங்கள ,தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபில்  கலந்து கொண்டபோதே  சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விலை குறைப்பு இன்று முதல்  நடைமுறைக்கு வரும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  சிவப்பு கௌபி 1 கிலோ கிராம் 55 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1095 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளை கௌபி 1கிலோ கிராம் 50 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1200 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் 1 கிலோ கிராம் 40 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 325 ரூபாவாகவும், டின் மீன் 425 கிராம் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 575 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.

காய்ந்த மிளகாய் 1 கிலோ கிராம் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1210 ரூபாவாகவும் பெரிய வெங்காயம் 1 கிலோ கிராம் 15 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 365 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

வெள்ளை சீனி 1 கிலோ கிராம் 13 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 275 ரூபாவாகவும்  உருளைக் கிழங்கு 1 கிலோ கிராம் 11 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

சிவப்பரிசி 1 கிலோ கிராம் 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 174 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் டின் மீன் 155 கிராம் 5 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 290 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது .

இதேவேளை பாஸ்மதி அரிசி 1 கிலோ கிராம் 5 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 760 ரூபாவாகவும் நிலக்கடலை 1 கிலோ கிராம் 40 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1300 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply