நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப் பகுதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடும் வெப்பநிலை நிலவும் பகல் நேரத்தில் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
கடும் வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக காற்றின் வேகம் குறையும் எனவும், மேகக் கூட்டங்கள் குறையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இன்றும் நாளையும் மாணவர்களை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
விளையாட்டுப் பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.