நாளையதினம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் நூல் வெளியீட்டு விழா!

பாராளுமன்ற உறுப்பினர்  இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதியுள்ள மகே கதாவ (எனது கதை)  என்ற வாழ்க்கைச் சரிதை நூல் நாளை மாலை 3.45 மணிக்கு கொழும்பு 10, ஆனந்த கல்லூரி, குலரத்ன   கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது.

சிங்களத்தில் வெளியிடப்படும் இந்நூல் மிக விரைவில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும்  வெளியிடப்படவுள்ளது .

குறித்த நிகழ்வில்  முன்னாள் ஜனாதிபதி,  பிரதமர்,சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள்  என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை,   வல்பொல  ராகுல பௌத்த கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரும்  களனி பல்கலைக்கழகத்தின்  சிரேஷ்ட விரிவுரையாளருமான கல்கந்தே தம்மானந்த தேரர், பிரபல ஊடகவியலாளர்  கலாநிதி ரங்க கலன்சூரிய , இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரும்  பிரபல ஊடகவியலாளருமான ஏரானந்த ஹெட்டிஆராச்சி  ஆகியோரால்  நூல் தொடர்பான கருத்துரைகள் நிகழ்த்தப்பட உள்ளன.

வாழ்க்கையோட்டத்தில் தான் பெற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் முகமாக 19 அத்தியாயங்களில் தமது சிறுபராயம், பாடசாலை கல்வி, பல்கலைக்கழகக் கல்வி , சட்டக் கல்லூரி கல்வி,  மாணவ கால போராட்டத்தோடு  ஐந்து தசாப்த கால கொள்கை ரீதியான அரசியல் பயணப் பாதை  மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை அடங்கலான இந்த சுயசரிதை நூல்  அவர் கல்வி கற்ற ஆனந்த கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply