இலங்கையின் மத்திய மலைநாட்டில் சுமார் ஒருமாத காலமாக கடுமையான வறட்சியான காலநிலை நிலவி வருகிறது.
இதன் காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 25 சதவீதமாக குறைந்துள்ளது.
மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ, லக்ஷபான நீர்மின்சார வளாகத்தின் கீழ் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
நேற்று காலை 6.00 மணி நிலவரப்படி 24 அடி மற்றும் 22 அடியாக இருந்ததாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலைமை தொடர்ந்தால் மின் தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.