இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான விஷேட பொருட்கள் வரி அரசாங்கத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அரிசிக்கான வரியும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி இன்று (27) முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெரிய வெங்காயத்தின் (இளஞ்சிவப்பு வெங்காயம்) இறக்குமதிக்கான வரி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை கிலோ கிராம் ஒன்றுக்கு 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட சரக்கு வரிச்சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.