மின்சாரத்துறை சீர்திருத்த சட்டமூலத்தின் திருத்தப்பட்ட பதிப்பிற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, புதிய மின்சாரத் துறை சட்டமூலத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை வர்த்தமானியில் பிரகடனம் செய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விஜேசேகர, இந்தச் சட்டமூலம் ஏப்ரல் கடைசி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதுடன் இந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 2 வாரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.