ஆப்பிள் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கடிகாரங்களில் , இதய துடிப்பு கண்காணிப்பு சைக்கிள் டிராக்கிங் உள்ளிட்ட வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதிதாக அறிமுகமாக உள்ள ஆப்பிள் சீரிஸ் 6 கடிகாரங்களில் ரத்த ஆக்ஸிஜன் சென்சார்களை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதற்காக தைவானை சேர்ந்த ஏஎஸ்இ தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் புரிந்துணர்வு போட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரத்த ஆக்ஸிஜன் கண்டுபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரத்த ஆக்சிஜன் கண்காணிப்பு என்பது, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை கண்காணிக்கும்.தற்போது, கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் குறையும் போது அது குறித்து எச்சரிக்க இந்த வாட்சுகள் பெரும் உதவியாக இருக்கும். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளவை கண்டுபிடிக்க பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தப்படும் நிலையில், ஆப்பிள் வாட்சுகளில் சிவப்பு மற்றும் அகச்சிவப்பு ஒளிக்கதிர்கள் மூலம் ரத்த ஆக்ஸிஜனை கண்டுபிடிக்க உதவும்.
ஆப்பிள் வாட்சுகளில் ரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு வசதியை இடம்பெறப்போவதை கண்டுபிடித்த நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு ஐஓஎஸ் 14 ல், ரத்த ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்கும் வசதி இடம்பெற்றதை குறிப்பிட்டிருந்தது. ரத்த ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்கும் வசதி, ஆப்பிள் வாட்ச் 6 ல் மட்டும் இடம்பெறுமா அல்லது அதற்கு அடுத்தடுத்த வெளியாகும் ஆப்பிள் வாட்சுகளில் இடம்பெறுமா என்பது தெளிவாகவில்லை.
ஆப்பிள் 6 வாட்சுகள், இந்த ஆண்டு இறுதியில் ஐபோன் 12 வரிசையுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், ஆப்பிள் 6 வாட்சுகளில் அதிவேகத்தில் இயங்கும் பிராசசர்கள், தண்ணீர் தடுப்பு வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.