தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆளுநர் செயலகம் முன் போராட்டம்!

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய் மற்றும்  கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து அந்தப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

“மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீகக் காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தைப் பறிக்காதே, மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா?, எமக்கு நீதி வேண்டும், மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் முடிவில் மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply