எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்றவர் மாயம்- கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவிப்பு!

தென்மேற்குப் பருவமழை காரணமாக இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி குறித்த மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரியின் கரகல பிரதேசத்தில் அதிகளவான மழை பதிவாகியுள்ள நிலையில், அது 143.3 மி.மீ மழைவீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply