அமெரிக்காவில் டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு 45 நாட்கள் அவகாசம் அளிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலி, தனிநபர் தகவல்களை கையாள்வது தேசிய அளவில் பாதுகாப்பற்றது என அமெரிக்கா கருதுகிறது. இதனையடுத்தே மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான யோசனையை நிராகரித்த பின்னர், அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதிபர் டிரம்ப் மற்றும் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா இடையே நடந்த ஆலோசனையை தொடர்ந்து வாஷிங்டனை சேர்ந்த ரெட்வுட் நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.