கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மின்னணு சாதனங்கள் மூலம் கண்காணிக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சிங்கப்பூர், தனது எல்லைகளை படிப்படியாக திறந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர் மூலம், வைரஸ் பரவி வருகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மற்றும் சிங்கப்பூரில் வசிப்பவர்கள் அனைவரையும் மின்னணு முறையில் கண்காணிக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் 11 ம் தேதி முதல், சிங்கப்பூர் வரும் தங்கள் நாட்டு குடிமக்கள் மற்றும் சிங்கப்பூரில் வசிப்பவர்கள், குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வருபவர்கள் உள்ளிட்டோரை வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள சிங்கப்பூர் அரசு முடுடிவு செய்துள்ளது. இதற்காக தனிமைபடுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் வகையில், மின்னணு டேக் ஒன்றை அவர்களுக்கு அளிக்கப்படும். இது போன்ற சாதனங்களை பயன்படுத்தி ஹாங்காங் மற்றும் தென் கொரியாவிலும் பயன்படுத்தி, மக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிற.
ஜிபிஎஸ், புளூடூத் சிக்னலுடன் இயங்கும் இந்த மின்னணு டேக்கை, சிங்கப்பூர் சென்றவர்கள், வீட்டிற்கு சென்றவுடன் ஆக்டிவேட் செய்ய வேண்டும். வீட்டிற்கு சென்றவுடன் வரும் நோட்டிபிகேஷனை ஏற்று அனுமதிக்க வேண்டும்.
இதன் பின்னர் தனிமைபடுத்தப்பட்ட நாட்களில் வீட்டை விட்டு சென்றாலோ அல்லது அந்த கருவியை சேதப்படுத்த முயன்றால், அதிகாரிகளுக்கு தகவல் செல்லும். உடனடியாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுபபார்கள். தனி நபரின் தகவல்கள் எதுவும் சேரிக்கப்படாது. ஆடியோ மற்றும் வீடியோ பதிவு வசதிகள் ஏதும் இல்லை என தெரிவித்துள்ள சிங்கப்பூர் அரசு, 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த கருவியை பயன்படுத்த தேவையில்லை எனக்கூறியுள்ளது.