சீனா தற்போது தொடர்ந்து பல நாடுகளுடன் மோதி வருகிறது. குறிப்பாக ஹாங்காங், தைவான் உள்ளிட்ட நாடுகளை கையகப்படுத்த நினைக்கிறது. கடந்த ஜூலை முதலாம் திகதி ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியது சீனா. இதனைத்தொடர்ந்து ஹாங்காங்கில் தொடர் போராட்டம் வெடித்தது.
அவ்வப்போது சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே போராடுபவர்கள்மீது சீன போலீசார் வன்முறையை ஏவினர். இவர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் கைது செய்யப்பட்டனர். சீனாவுக்கு எதிராகப் போராடும் தனிநபர்கள், குழுக்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் சீனா எடுத்துவருகிறது. சமீபத்தில் கனடாவில் உள்ள சீனாவுக்கு எதிரான ஹாங்காங், தைவான், இந்திய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.
சீனாவின் செயலைக் கண்டித்து இவர்கள் கனடா வீதியில் பேரணி நடத்தினர். முன்னதாக இந்தியாவில் லடாக் பிரச்னை காரணமாக கல்வான் பகுதியில் போராட்டம் நடத்திய சீனா, 20 இந்திய வீரர்களைத் தாக்கியதில் அவர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் இந்த அத்துமீறலுக்கு கனடாவில் உள்ள இந்திய ஆதரவு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என இந்த அமைப்புகள் கூறியுள்ளன.