லண்டனில் படகு போக்குவரத்தினை துவங்கியுள்ள ‘உபேர்’ நிறுவனம்

பிரிட்டனில் பயணிகளுக்கான படகு போக்குவரத்து சேவையை ‘உபேர்’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாயும் தேம்ஸ் நதியில் சுமார் 24 km தூரத்திற்கு படகு போக்குவரத்தினை தேம்ஸ் கிளிப்பர்ஸ் என்ற நிறுவனம் தற்போது நடத்தி வருகிறது. அந்நிறுவனத்துடன் உபேர் நிறுவனமும் கடந்த ஜூலை முதல் இணைந்துள்ளது.

உபேர் நிறுவனம் இணைந்துள்ளதால் படகுகளில் பயணம் செய்பவர்கள் உபேர் ஆப்பினை பயன்படுத்தி மொபைல் மூலமாகவே தங்களது டிக்கெட்டுகளை முன்பதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேம்ஸ் நதியில் புட்னி மற்றும் வுல்விச் இடையே 23 படகுகள் இயக்கப்படும் படகுகளில் பயணித்துக் கொள்ளலாம். பயணிகள் தேம்ஸ் கிளிப்பர்ஸ் ஆப் மூலமாகவும் டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்

பிரிட்டனில் ஆண்டுக்கு சராசரியாக 43 லட்சம் பேர் வரை தேம்ஸ் நதியில் படகு மூலம் பயணித்து வந்தனர். சமீபகாலமாக கொரோனா பரவல் காரணமாக மேலும் பல பயணிகள் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தினை தவிர்த்து படகு போக்குவரத்தில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir