சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் டேவிட் வோர்னர்!

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவின் வோர்னர் அறிவித்துள்ளார்.

டி20 உலகக்கிண்ணத் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை அவுஸ்திரேலியா அணி தவறவிட்டது.

இதனால் ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் மோதிய ஆட்டத்தின் முடிவில் அவுஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா அல்லது வெளியேறுமா என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்த நிலையில் அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வோர்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலியா அணிக்காக 18,995 ஓட்டங்களைப் எடுத்துள்ளார். இதில் 49 சதம் அடங்கும். அவுஸ்திரேலிய அணி 2 ஒருநாள் உலகக் கிண்ணங்கள் வென்ற அணியில் வோர்னர் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரு டி20 உலகக் கிண்ண அணியிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியிலும் வோர்னர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply