ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்குள் பொரிந்த நிலையில் பல்லி!

யாழ்ப்பாணம் – செல்வச்சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரிந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விற்பனை செய்த நபருக்கு 15,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது நேற்று இடம்பெற்ற போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது, ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரிந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் அந்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்நார்.

இந்நிலையில் மிக்ஸரை விற்பனை செய்த நபரை கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு எதிராக 15 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply