சிவப்பு அறிவித்தல் விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரபிக்கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , 06 மற்றும் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 55 மற்றும் 70 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட பகுதியில் மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாக நிலத்திற்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் , மறு அறிவித்தல் வரை அந்த கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply