நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பிற்கு பணிப்புரை -இந்திரஜித்!

எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய , நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்ளுமாறும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட விலைகள் தொடர்பில் விசேட அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply