2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூலவாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் 7 முதல் 14 நாட்களுக்குள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியுடைய அனைவரும் நிறுவன பிரதானிகளின் கையொப்பத்துடன் ஒக்டோபர் 8 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஒக்டோபர் 4 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.