முட்டை விலையில் மக்களுக்கு மானியம் ?

முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முதலீடு செய்து முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால், முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
இந்நிலையில் விலையை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் காரணமாக மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சி சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உற்பத்திச் செலவு அதிகமாகியுள்ள நிலையில், கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதில் சிரமம் இருப்பதால், உற்பத்தியாளர்கள் கோழிகளை இறைச்சியாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply