சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்!

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஶ்ரீலங்கா  பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

சபாநாயகர் ஆரம்பத்தில் கலாநிதி பட்டம் மற்றும் பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளதாக காட்டி மக்களை ஏமாற்றியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தனது நாடாளுமன்றக் குழுவின் ஊடாக சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு முழு எதிர்க்கட்சியினரும், அரசாங்கத்தின் மனசாட்சியுள்ள உறுப்பினர்களும் பங்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply