
இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியன்று உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
பெத்லஹேமில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் இவ்வுலகிற்கு அவதரித்த யேசுபாலகன் மனித வர்க்கத்தின் பாவங்களை நீக்குவதற்காக பிறந்ததாக இன்றைய தினம் மக்கள் நினைவு கூருகின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹேமில் நகரில் தந்தார் பண்டிகை கொண்டாட்டம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பெத்லஹேம் மேயர் தெரிவித்துள்ளார்.