
கசகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது, அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் இருந்து இன்று அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ரஷ்யாவின் குரோசனி நகருக்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் என்று மொத்தம் 72 பேர் பயணித்தனர்.
விமானம் கசகஸ்தான் நாட்டின் வான்பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்த வேளையில், விமானத்தில் ஏதோ பிரச்சனை ஏற்படவே விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்போதே, கசகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கிய வேளையில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
தரையில் மோதிய வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் பயணித்த 72 பேரின் கதி என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை.
மீட்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.